இந்திய வீரர்களில் டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா முதலிடத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் அவர், மற்ற முன்னணி இந்திய வீரர்களை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த டி20 போட்டிகளிலும் சதங்கள் அடிப்பது பேட்ஸ்மேன்களின் அதிரடி திறனை வெளிப்படுத்தும் முக்கிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய வீரர்களில் 11 சதங்களுடன் அபிஷேக் சர்மா முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 10 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும், கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன், ரோஹித் சர்மா ஆகியோர் தலா 8 சதங்களுடன் அடுத்த இடங்களிலும் உள்ளனர். இஷான் கிஷன், சுப்மன் கில் தலா 7 சதங்களும், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ் தலா 6 சதங்களும் அடித்துள்ளனர். ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல் 22 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

