பும்ரா விஷயத்துல கவனமா இருங்க.. அது அவருக்கு ஆபத்தான முடியும்.. இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து தெரிவித்துள்ள கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது. நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணித் தேர்வு குறித்துப் பேசிய அவர், பும்ராவின் பணிச்சுமையைச் சரியாக நிர்வகிப்பது அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -

பும்ரா இந்திய அணியின் முக்கியமான பந்துவீச்சாளராக இருந்தாலும், அவரைத் தொடர்ந்து அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாட வைப்பது சரியான முடிவாக இருக்காது என்பது சாஸ்திரியின் கருத்து. நீண்ட காலத்துக்கு அவரது சேவையைப் பயன்படுத்த வேண்டுமென்றால், எந்தத் தொடரில் விளையாட வைக்க வேண்டும், எப்போது ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதில் அணி நிர்வாகம் கவனமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

இதற்கிடையில், அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியிருப்பதையும் சாஸ்திரி வரவேற்றுள்ளார். முகமது ஷமியும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மீண்டும் வாய்ப்புப் பெறுவதற்குத் தகுதியானவர் என்று அவர் தெரிவித்துள்ளார். 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து, அனுபவத்துக்கும் இளம் வீரர்களின் திறமைக்கும் இடையே இந்திய அணி சரியான சமநிலையை உருவாக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles