வீடியோ.. 6 பந்து 21 ரன் தேவை..4,6,6,2,6.. நம்ப முடியாத பினிஷிங்.. வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்தின் திக் திக் போட்டி

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் ஹாரி ப்ரூக்கின் அதிரடியால் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றியை பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது இங்கிலாந்து அணி.

- Advertisement -

இதற்கு முன்னர் நடைபெற்ற ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. அதற்குப் பின்னர் அடுத்த வருடம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரு வெற்றிகளை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாவது போட்டியை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொண்டது.

- Advertisement -

இந்நிலையில் கிரேனாடாவில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிக்கோலஸ் பூரான் அதிகபட்சமாக 6 பவுண்டரி 6 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் விளாசினார். மற்றும் சாய் கோப் (26), ரோவ்மன் போவல்(39) ரன்கள் குவிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணித் தரப்பில் அடில் ரசித் சாம் கரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டைகளை கைப்பற்றினார்கள். பின்னர் பேட்டிங் களம் இறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட தூங்கியது. அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் ஐந்து பௌண்டரி இரண்டு சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.

அடுத்து களம் இறங்கிய வில் ஜேக்ஸ் 1 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றினார். மற்றொரு துவக்க வீரர் பிலிப் சால்ட் அரை சதம் அடித்தார். பின்னர் வந்த லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடி 30 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, பிலிப்ஸ் சால்ட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

- Advertisement -

இதனால் இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. அந்த தொடரில் நன்றாக செயல்பட்ட ஆண்ட்ரே ரஸல் தனது கடைசி ஓவர் வீச வந்தார். அவரை எதிர்கொண்ட ஹாரி ப்ரூக்ஸ் தனது முதல் ஐந்து பந்துகளில் 4,6,6,2,6 என 24 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியை அபாரமாக வெற்றி பெற வைத்தார். அவர் மொத்தம் ஏழு பந்துகளில் 31 ரன்கள் குவித்தார்.

இதனால் இங்கிலாந்து அணி 19.5 ஓவர்களிலேயே 226 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றியைத் தடுத்து தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. எனவே தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அநியாயம் களமிறங்கியுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles