ரோஹித் கோலி இல்ல பாஸ்.. 2023-ல் அதிக சம்பளம் வாங்கிய இந்திய வீரர் இவர்தான்.. வெளியான டாப் 10 லிஸ்ட்.!

ஐசிசி உறுப்பு நாடுகளில், அதிகாரமிக்க ஃபோர்டகவும், மற்றும் அதிக வருமானம் ஈட்டும் ஃபோர்டகவும் பிசிசிஐ உள்ளது. பிசிசிஐ மேற்பார்வையில் நடத்தப்படும் ஐபிஎல், டி20 தொடர்களில் அதிக வருமானம் ஈட்டும் தொடராக உள்ளது.

- Advertisement -

2023 ஆம் ஆண்டில், இந்திய கிரிக்கெட் அணி, ஏழு இருதரப்பு ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடி ஆறு இருதரப்பு தொடர்களில் வென்றுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் தொடர்ந்து பத்து போட்டிகளை வென்றும், இறுதிப் போட்டிக்கு முன்னேறியும் இருந்தது. இந்திய கிரிக்கெட் அணி 2023ஆம் ஆண்டு, 35 ஒருநாள் போட்டிகள் விளையாடி, 27 வெற்றி பெற்றது. இதன் மூலம் ஓராண்டில் அதிக ஒருநாள் போட்டிகளை வென்ற ஆண்டாக 2003 ஆம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பு மிக்க ஆண்டாக அமைந்துள்ளது.

- Advertisement -

பிசிசிஐ ஒருநாள் உலக கோப்பையை கருத்தில் கொண்டு, சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து, சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்தியதால் சீனியர் வீரர்கள் மட்டுமின்றி, இளம் வீரர்களும், ஒருநாள் போட்டியின் மூலம், 2023ஆம் ஆண்டு நல்ல வருமானம் பெற்றுள்ளனர்.

- Advertisement -

பிசிசிஐ ஒருநாள் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு போட்டிக்கு, இந்திய மதிப்பில் 6 லட்சத்தை சம்பளமாக வழங்குகிறது. இதன் அடிப்படையில், 2023ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியின் மூலம் அதிக வருமானம் ஈட்டிய வீரர்களில், முதல் இடத்தை குல்திப் யாதவ் பெறுகிறார். இவர் 2023ஆம் ஆண்டு 30 ஒருநாள் போட்டியில் விளையாடி, 1.80 கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ளார். குல்திப் யாதவ் வருமானம் ஈட்டியதில் மட்டுமின்றி, ஒருநாள் போட்டிகளில் 49 விக்கெட்டுகளை வீழ்த்தியும், 2023ஆம் ஆண்டு அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

1584 ரன்கள் மூலம், 2023ஆம் ஆண்டு அதிக ரண்களை குவித்தவராக உள்ள ஷுப்மான் கில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர் 29 போட்டியில் விளையாடி இந்திய மதிப்பில் 1.74 கோடி சம்பாதித்துள்ளார். 27 போட்டிகளில் விளையாடி, ரூபாய் 1.62 கோடி சம்பளமாக பெற்று, மூன்றாம் இடத்தில் கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் உள்ளனர்.

- Advertisement -

26 ஒருநாள் போட்டிகள் விளையாடிய, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 1.56 கோடி சம்பாதித்து நான்காவது இடத்தில் உள்ளார். ஐந்தாவது இடத்தில் உள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், 25 ஒருநாள் போட்டிகள் விளையாடி 1.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். முகமது சிராஜ் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் 44 விக்கெட்டுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் முகமது சிராஜ் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், 2023ஆம் ஆண்டு முதல் இடத்தையும் பகிர்ந்தார்.

ரூபாய் 1.6 கோடி வருமானமாக ஈட்டி சூர்யகுமார் யாதவ் ஆறாம் இடத்திலும், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ரூபாய் 1.20 கோடி சம்பாரித்து ஏழாம் இடத்தில் உள்ளனர்.

ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில், தனது துள்ளிய வேகப்பந்து வீச்சால் எதிரணி வீரர்களை மிரள விட்ட முகமது ஷமி, 2023ஆம் ஆண்டு அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில், 19 ஒருநாள் போட்டியில், 43 விக்கெட்டுகளை எடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளார். இவர் ரூபாய் 1.14 கோடி வருமானம் பெற்று எட்டாம் இடத்தில் உள்ளார்.

ஒன்பதாம் இடத்தில் வேக பந்துவீச்சாளர் பும்ரா, மற்றும் இஷான் கிஷன், ரூபாய் 1.02 கோடி வருமானம் பெற்று பகிர்ந்து உள்ளனர். 96 லட்சம் வருமானமாக பெற்று, பத்தாம் இடத்தில் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் உள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles