வெளியேறிய 12 வீரர்கள்… கோஹ்லி, ரோகித் ரிட்டன்… இந்தியா டெஸ்ட் அணியின் 15 பேர் கொண்ட முழு வீரர்கள் பட்டியல்.!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வருகிறது. இதில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 1-1 என்று சமநிலையிலும், கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற நிலையில் வெற்றி பெற்றது.

- Advertisement -

டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரில், பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பை அளிக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்க, இந்திய சீனியர் வீரர்கள் மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.

- Advertisement -

குறுகிய வடிவிலான போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் ஷர்மா, மீண்டும் அணிக்கு திரும்பியதுடன், டெஸ்ட் போட்டியை தலைமை தாங்குகிறார். இவருடன் சீனியர் வீரர்களான, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் அணியில் இணைந்துள்ளனர்.

- Advertisement -

ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்ற வீரர்களில், கே.எல் ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய நான்கு வீரர்கள் மட்டுமே டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் தொடரில் பங்கேற்ற, சாய் சுதர்சன், ரஜத் படிதார், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரின்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய 12 வீரர்கள் நாடு திரும்ப உள்ளார்கள்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய, சுப்மான் கில், ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ், ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில், இவர்கள் டெஸ்ட் போட்டி தொடருக்கான அணியில் இணைந்துள்ளனர்.

- Advertisement -

டெஸ்ட் போட்டி தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த முகமது ஷமி காயம் காரணமாக விலகிய நிலையில், இஷான் கிஷன் தனிப்பட்ட காரணங்களால் டெஸ்ட் அணியில் இருந்து விலகியதால், அந்த இடத்திற்கு கே.எஸ்.பாரத் சேர்க்கப்பட்டார். மேலும் வேகபந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, மற்றும் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் இந்திய டெஸ்ட் அணியில் இணைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாடும் இந்திய அணி, வரும் டிசம்பர் 26ஆம் தேதி, செஞ்சூரியனில் பாக்சிங் டே டெஸ்டுடன் தொடங்குகிறது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, ஜனவரி 3-ஆம் தேதி, கஃபே டவுனில் நடைபெற உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டி தொடரை இதுவரை வென்றதில்லை. தோனி மற்றும் விராட் கோலிக்கு பிறகு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை மீண்டும் முதலிடத்துக்கு முன்னேற்றிய கேப்டன் ரோகித் சர்மா இந்த முறை தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டி தொடரை வென்று வரலாறு படைப்பார் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகும்.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விபரம்:

ரோகித் சர்மா (கேப்டன்), பும்ரா (துணை கேப்டன்), விராட் கோலி, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல், ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், , பிரசித் கிருஷ்ணா மற்றும் கேஎஸ் பாரத்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles